கொரோனா சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, May 12, 2021

கொரோனா சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 கொரோனா சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


சென்னை:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை வழிகாட்டி முறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வகையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை வகுப்பதற்கு, மருத்துவ நிபுணர் குழு கூட்டம் 9ம் தேதி நடந்தது. 


அதில் தெரிவித்த கருத்துகளின்படி, கொரோனா சிகிச்சை வழிகாட்டி முறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் 14 நாட்கள் அமலில் இருக்கும். அதன்பின் மீண்டும் மருத்துவ நிபுணர் குழு கூடி அவற்றை ஆய்வு செய்து, அடுத்து மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளை அறிவிக்கும்.


தற்போது அரசு விதிமுறைகளின்படி, பாதிப்புக்குள்ளானவர்களை பரிசோதனை செய்து, நோய் பாதிப்புக்கு ஏற்ப நான்கு பிரிவுகளாக பிரித்து சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டு


உள்ளது. அதன் விபரம்:பிரிவு - 1


* ரத்த ஆக்சிஜன் அளவு 96 சதவீதத்திற்கு மேல் இருப்போர் 


* தொடர் காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, இருமல், சுவை இழப்பு, வாசனை அறிய முடியாமை, மூச்சு திணறல் போன்றவை, கொரோனா நோய் அறிகுறிகள்


* கொரோனா பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு உரிய மாத்திரைகளை வழங்க வேண்டும்


* குறைந்த நோய் பாதிப்புடன் உள்ளவர்களில் வேறு இணை நோய் இல்லாமல் இருந்தால், அவர்களின் உடல் நலத் தகுதியை பரிசோதித்து, வீட்டு கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தலாம். வேறு ஏதேனும் பாதிப்பு இருந்தால், கொரோனா கண்காணிப்பு மையத்திற்கு அனுப்ப வேண்டும். 


பிரிவு - 2

 ரத்த ஆக்சிஜன் அளவு, 95 முதல் 96 வரை உள்ளவர்கள் 

இவர்களை, ஆரம்ப சுகாதார மையம் மற்றும் கொரோனா பாதுகாப்பு மையத்தில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் 


நோய் பாதிப்பு அதிகரித்தால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.


பிரிவு - 3


ஆக்சிஜன் அளவு 90 முதல் 94 வரை உள்ளவர்கள்


இவர்களை உடனடியாக, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, கொரோனா மருத்துவமனை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்

 அவர்களின் நாடித் துடிப்பு, ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு ஆகியவற்றையும் பரிசோதித்து நோயாளிகளின் உடல் நிலையை மதிப்பிட வேண்டும். இணை நோய் உள்ளவர்களின் உடல்நிலையை அவசியம் பரிசோதிக்க வேண்டும்

உடனடியாக கொரோனா நோய் தடுப்பு மருந்துகளை வழங்கி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

பிரிவு - 4

ஆக்சிஜன் அளவு 90க்கு கீழ் உள்ளவர்கள். அவர்களுக்கு ஆக்சிஜன் வசதி செய்து உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்


இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுஉள்ளன. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய மருந்துகள் குறித்த விபரங்களும், இதில் இடம் பெற்றுஉள்ளன.

No comments:

Post a Comment