கொரோனா தடுப்பு பணிகளில் சிகிச்சைஅளிக்க, இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு அழைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, May 12, 2021

கொரோனா தடுப்பு பணிகளில் சிகிச்சைஅளிக்க, இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு அழைப்பு

 கொரோனா தடுப்பு பணிகளில் சிகிச்சைஅளிக்க, இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு அழைப்பு


கொரோனா தடுப்பு பணிகளில் சிகிச்சைஅளிக்க, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்களுக்கு, மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.


சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சியில், கொரோனா தொற்று தடுப்பு பணிகள் மேற்கொள்ள, பயிற்சி டாக்டர்கள், மூன்று மாத காலத்திற்கு, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். விருப்பம் உள்ள தகுதி வாய்ந்த எம்.பி.பி.எஸ்., இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள், தங்களது அசல் சான்றிதழ்களை, 


gccteledoctor2021@gmail.com


என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, இன்று பகல், 12:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்


கூடுதல் விபரங்களுக்கு, 044 -- 2561 9330 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். பயிற்சி டாக்டர்கள் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில், இறுதியாண்டு எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும். மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.


மின்னஞ்சலில் பெறப்படும் சான்றிதழ் அடிப்படையில், தொலைபேசியில் நேர்முகத் தேர்வு நடைபெறும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்ற வேண்டும். இப்பணி தற்காலிகமானது; பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment