வாட்ஸ்அப் குழுவில் பெற்றோர் பிரதிநிதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 31, 2021

வாட்ஸ்அப் குழுவில் பெற்றோர் பிரதிநிதி

 வாட்ஸ்அப் குழுவில் பெற்றோர் பிரதிநிதி


அரசு பள்ளிகளின் கல்விசார்ந்த 'வாட்ஸ்அப்' குழுக்களில் பெற்றோர் ஆசிரியர் பிரதிநிதி கட்டாயம் இருக்க வேண்டும்'' என, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்த சுற்றறிக்கையில், ''கொரோனா பரவலால் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'வாட்ஸ்அப்' உள்ளிட்ட மொபைல் செயலிகள் வழியாக பாடம் நடத்தி வருகின்றனர்.

 இத்தகைய 'வாட்ஸ்அப்' குழுக்களில் பாடம் தவிர்த்து இதர கருத்துகளை பகிரக்கூடாது. 


இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் அவ்வப்போது, 'மாணவர்- ஆசிரியர் வாட்ஸ்அப் குழு'க்களை கண்காணிக்க வேண்டும். மேலும், 'வாட்ஸ்அப்' குழுக்களில் பெண் ஆசிரியை அல்லது பெற்றோர் சங்க பிரதிநிதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.' என, தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment