பஸ்சில் ஆக்சிஜன் சிகிச்சை தனியார் பள்ளி ஏற்பாடு - மின்னல் கல்விசெய்தி

Latest

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

இங்கே தேடவும்!

Sunday, May 16, 2021

பஸ்சில் ஆக்சிஜன் சிகிச்சை தனியார் பள்ளி ஏற்பாடு

 பஸ்சில் ஆக்சிஜன் சிகிச்சை தனியார் பள்ளி ஏற்பாடு


மதுரையில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம், ஆக்சிஜன் சிகிச்சைக்கு தங்கள் பள்ளி பஸ்களை வழங்கி உதவியுள்ளது.


கொரோனா அதிகரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல், நாள் கணக்கில் ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்கின்றனர்.இதை தவிர்க்க, ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்காக மூன்று பஸ்களை கொடுத்துள்ளது, 


மதுரை, மேலுார் ஆர்.வி. மெட்ரிக் பள்ளி நிர்வாகம்.தாளாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது:ஒரு பஸ்சில் நான்கு சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதல் சிலிண்டர்கள் கிடைத்தால் பள்ளியின் அனைத்து பஸ்களையும் ஒப்படைக்கத் தயார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, என் பள்ளியையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என, சுகாதாரத் துறையிடம் தெரிவித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.


இதற்கான முயற்சியை, உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் அன்புநிதி, ரமேஷ், அமலன் ஆகியோர் மேற்கொண்டனர். அன்புநிதி கூறியதாவது:கொரோனா முதல் அலையின்போது, முதல் 100 நாட்களுக்கு இலவசமாக அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு அளித்தோம்.


தற்போது ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால், பள்ளி பஸ்களில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது.முதலில் சிலிண்டர்கள் கிடைக்கவில்லை. சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம் கூறிய பின், ஐந்து சிலிண்டர்கள் கிடைத்தன. ஒரு சிலிண்டரில், மூவருக்கு ஆக்சிஜன் கொடுக்க முடியும். முதல் கட்டமாக ஒரு பஸ்சை மட்டும் இன்று மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளோம். அவர்கள் ஆக்சிஜன் சிகிச்சை அளிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment