புதிய கல்வி கொள்கை குறித்த கலந்துரையாடலை கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் நடத்த மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, May 16, 2021

புதிய கல்வி கொள்கை குறித்த கலந்துரையாடலை கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் நடத்த மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம்

 புதிய கல்வி கொள்கை குறித்த கலந்துரையாடலை கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் நடத்த  மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம்


புதிய கல்வி கொள்கை குறித்த கலந்துரையாடலை கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் நடத்துவதே ஏற்புடையது என மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.  இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: 


கோவிட் நோய்த்தொற்று காலத்தில் கல்வி அமைப்பு மேலாண்மை, பள்ளிகளில் இணைய வழி  கல்வி தொடர்வதற்கான வழிமுறைகள், புதிய தேசிய கல்விக்கொள்கையை  நடைமுறைப்படுத்துதலின்  நிலை போன்றவை குறித்து மாநிலங்களின் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் இன்று கலந்துரையாட இருப்பதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழக அரசு சார்பில் தமிழக பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்கள், மத்திய கல்வி அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இக்கலந்துரையாடல் கூட்டத்தை தமிழ்நாடு அரசின் கல்வித்துறை அமைச்சர் மற்றும்  உயரதிகரிகளுடன் நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும்.


 அக்கூட்டத்தில் மாநில அரசின் சார்பாக மிகமுக்கியமான பொருண்மைகளான புதிய தேசிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்துதலின் நிலை போன்றவற்றின் மீதான கருத்துக்களையும், பரிந்துரைகளையும் தாம் அளிக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment