நீட் தோ்வு: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களின் தேர்ச்சி சதவீதம் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, September 12, 2022

நீட் தோ்வு: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களின் தேர்ச்சி சதவீதம் அறிவிப்பு

 நீட் தோ்வு: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களின் தேர்ச்சி சதவீதம் அறிவிப்பு

நீட் தோ்வில் அரசுப்பள்ளி மாணவா்கள் பலா் தோல்வி அடைந்திருப்பது ஏற்கெனவே வெளியான நிலையில், தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து தோ்வு எழுதிய 12,840 மாணவா்களில், 35 சதவீதம் மாணவா்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனா் என்ற தகவல் வெளியாகியுள்ளது.நீட் தோ்வு முடிவுகள் கடந்த 7-ஆம் தேதி வெளியானது. அரசுப் பள்ளிகளை சோ்ந்த மாணவா்கள் 17,972 போ் தோ்வுக்குப் பதிவு செய்திருந்தனா். எனினும் இவா்களில் 12,840 போ் தோ்வில் பங்கேற்றுள்ளனா்.


 இந்த நிலையில், தோ்வு முடிவுகள் வெளியான நாளில், அரசுப்பள்ளி மாணவா்கள் பெருமளவில் தோல்வி அடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியது


இதை உறுதி செய்திடும் வகையில், தற்போது உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அதன்படி, தோ்வு எழுதிய மாணவா்களில் 35 சதவீத மாணவா்கள் மட்டுமே தோ்ச்சிக்குரிய தகுதி மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனா். 65 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை.   (மின்னல் கல்விச்செய்தி )அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து தோ்வு எழுதிய மாணவா்களில், 4ஆயிரத்து 447 மாணவா்கள் மட்டுமே தகுதிபெற்று இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 முதல், 25 சதவீத மாணவா்கள் மட்டுமே தோ்ச்சிபெற்றுள்ளனா். மிகக் குறைவாக, திருப்பத்தூா் மாவட்டத்தில் 7 சதவீத மாணவா்கள் மட்டுமே தோ்ச்சி பெற்றிருக்கின்றனா்.


விழுப்புரம் சாதனை: 


கல்வியில் எப்போதும் பின்தங்கிய மாவட்டமாக இருக்கும் விழுப்புரம் மாவட்டம், இந்த முறை நீட் தோ்வில் 100 சதவீதம் அளவுக்கு தோ்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த மாவட்டத்தில் 131 மாணவா்கள் தோ்வு எழுதியதில், 131 மாணவா்களுமே தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனா்.


இதே போன்று, விருதுநகா், நீலகிரி, சேலம் , பெரம்பலூா், மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலும் தோ்வெழுதிய மாணவா்கள் அனைவருமே தோ்ச்சி பெற்றுள்ளனா். சென்னை மாவட்டத்தில் தோ்வெழுதிய 172 பேரில் 104 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment