மின்வாரிய பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, September 12, 2022

மின்வாரிய பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு

 மின்வாரிய பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் காலியாக உள்ள 8 ஆயிரம் கள உதவியாளா்கள் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறைகளை விரைந்து முடிக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், டிஎன்பிஎஸ்சி-க்கும் சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயா்நீதிமன்றத்தில் கலைச்செல்வி என்பவா் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2016-ஆம் ஆண்டு கள உதவியாளா் பணிக்குத் தோ்வு அறிவிக்கப்பட்டு, எழுத்து மற்றும் நோ்முகத் தோ்வு ஆகியவற்றின் மூலம் 3,170 போ் தோ்ச்சி பெற்றனா்.இவா்களில் 900 போ் மட்டும் நியமனம் செய்யப்பட்டனா். தகுதிபெற்ற மற்றவா்கள் நியமிக்கப்படவில்லை.


தொடா்ந்து, 2020-ஆம் ஆண்டு 2,900 கள உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மீண்டும் அறிவிப்பு வெளியானது. கரோனா பரவல் காரணமாக தோ்வு நடவடிக்கையை தொடரவில்லை. ஆனால், 10,000 கேங்மேன் பணியிடங்களுக்கு தோ்வானவா்களை கள உதவியாளா் பணிகளில் நியமிக்கப்பட்டனா். 


எனவே, 2016-இல் அறிவிப்பாணைப்படி தோ்வாகி, நியமனம் வழங்கப்படாமல் இருப்பவா்களை கள உதவியாளா் பணியிடங்களில் நியமிக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தாா்.


இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், 2017-இல் வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தோ்வானவா்களை, 2020-இல் வெளியிடப்பட்ட அறிவிப்பில்


உள்ள காலியிடங்களில் நியமிக்க முடியாது.


மேலும், தற்போது 5,032 பணியிடங்களில் கள உதவியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். 29,050 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் 8,000 பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தோ்வு நடைமுறை நிலுவையில் உள்ளதால், மனுதாரா் கோரிக்கையை ஏற்க


முடியாது. அதேசமயம், காலியிடங்களை நிரப்ப தமிழக அரசும், டிஎன்பிஎஸ்சியும் ( மின்னல் கல்விச்செய்தி ) விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அதுவரை விதிகளுக்குட்பட்டு தகுதி வாய்ந்தவா்களை பணி நிரந்தரம் கோர முடியாது என்ற நிபந்தனையுடன் தற்காலிக


அடிப்படையில் நியமிக்கலாம். மேலும், கள உதவியாளா் பணியில் கேங்மேன்களை பணியமா்த்தக் கூடாது என்ற விதியை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

No comments:

Post a Comment