போட்டி தேர்வுகளில் அதிகமாக அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற மாடல் பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, September 12, 2022

போட்டி தேர்வுகளில் அதிகமாக அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற மாடல் பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

 போட்டி தேர்வுகளில் அதிகமாக அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற மாடல் பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

அரசுப்  பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அதிகமாக தேர்ச்சி பெற மாடல் பள்ளிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழ்நாடு சாரண சாரணியர் அமைப்பின் தலைவராக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டார். 


அதன் தொடர்ச்சியாக பதவியேற்பு மற்றும் விருதுகள் வழங்கும் விழா சென்னை எம்சிசி பள்ளியில் நேற்று நடந்தது.


 அதில், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மாநில தலைவராகவும், பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் சாரண சாரணியர் இயக்க (தமிழ்நாடு) மாநில ஆணையராகவும், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளர் கண்ணப்பன் உள்பட 11 பேர் சாரண சாரணிய இயக்கத்தின் (தமிழ்நாடு) மாநில துணை தலைவர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர்


மின்னல் கல்விச்செய்தி


அப்போது அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி  பேசியதாவது: நீட் தேர்வுக்கு போதிய பயிற்சி அரசு சார்பில் அளிக்கப்படவில்லை என்பதை ஏற்கமுடியாது. கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். இருப்பினும் அந்த எண்ணிக்கை போதாது.


 நீட் தேர்ச்சியை பொறுத்தவரையில் தன்னிறைவு அடையும் வரை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மாணவர்கள் தேசிய அளவில் நடக்கும் போட்டித் தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே மாடல் பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும். பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் தற்போது 4 லட்சம் உள்ள மாணவர் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment