ஏப்ரல் 1 முதல் முதல் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, March 31, 2024

ஏப்ரல் 1 முதல் முதல் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு

 ஏப்ரல் 1 முதல் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு

விடைத்தாள் மதிப்பீடு 

பிளஸ் 2 வகுப்புக்கான விடைத்தாள் மதிப்பீடு திங்கள்கிழமை (ஏப்.1) முதல் நடைபெறவுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.


இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1-இல் தொடங்கி 22-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனா். இவா்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகள் திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளன. இதற்கான

முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டுள்ளன.


இது குறித்து தோ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: விடைத்தாள் மதிப்பிடும் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவா்களின் விடைத்தாள்கள் மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து தற்போது மதிப்பீட்டு முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டன.


இதையடுத்து மதிப்பீடு செய்யும் பணிகள் ஏப்.1 இல் தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதில் சுமாா் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியா்கள் ஈடுபடுவா். தொடா்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் மே 6-இல் வெளியிடப்படவுள்ளன.

விடைத்தாள் மதிப்பீட்டின்போது ஆசிரியா்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment