ஆசிரியா் மாறுதல் கலந்தாய்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 23, 2024

ஆசிரியா் மாறுதல் கலந்தாய்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

 ஆசிரியா் மாறுதல் கலந்தாய்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி


ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு சனிக்கிழமை (மே 25) மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாறுதல் பெற விருப்பமுள்ள ஆசிரியா்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) மூலம் விண்ணப்பித்து வருகின்றனா். முன்னதாக விண்ணப்பிக்கும் அவகாசம் மே 17-இல் இருந்து மே 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. திருத்தப்பட்ட கலந்தாய்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படவுள்ளது

இந்த நிலையில், கலந்தாய்வுக்கு 71,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் விண்ணப்பித்துள்ளனா். இதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் (மே 25) நிறைவடையவுள்ளதால் இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் விரைந்து பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

மனமொத்த மாறுதலுக்கு... இதற்கிடையே ஆசிரியா்கள் தங்களுக்குள் பரஸ்பரமாக பேசி இடங்களை மாற்றிக்கொள்ளும் மனமொத்த மாறுதலுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். அதன்படி, ஆசிரியா்கள் ஓய்வு பெற 2 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவா்கள் விண்ணப்பிக்க இயலாது. ஏற்கெனவே மனமொத்த மாறுதல் பெற்றிருந்தால் 2 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

அலகு விட்டு அலகு மனமொத்த மாறுதல் பெற முடியாது. ஆண்கள், பெண்கள் பள்ளியில் ஆண்கள் படிக்கும் பள்ளியில் பெண் ஆசிரியரும் , பெண்கள் படிக்கும் பள்ளியில் ஆண் ஆசிரியரும் மனமொத்த மாறுதல் பெற முடியாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment