விடைத்தாள் முறைகேடு விவகாரம்: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 28, 2019

விடைத்தாள் முறைகேடு விவகாரம்: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர் சஸ்பெண்ட்

விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


 அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ‘அரியர்’ தேர்வுகளில்  விடைத்தாள்களை மாற்றி வைத்து முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பான புகார் எழுந்தது.


இந்த புகாரின் அடிப்படையில் இதை விசாரிக்க அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, விசாரணைக்குழுவை நியமித்தார்.
இதுதொடர்பாக அந்த விசாரணைக்குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது.


இதில் அந்த தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட 7 மண்டலங்களை சேர்ந்த 37 தற்காலிக பணியாளர்கள் பட்டியலை  பல்கலைக்கழகத்துக்கு விசாரணைக்குழு வழங்கியது.

அதில், ‘2017-ம் ஆண்டு நவம்பர் மற்றும் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற அரியர் தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.

 மாணவர்களிடம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை பணம்  பெற்றுக்கொண்டு தற்காலிக பணியாளர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களின் விடைத்தாள்களை மாற்றி வைத்து இருக்கின்றனர். அதனைத்தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.


பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் தற்காலிக பணியாளர்களில் அலுவலக உதவியாளர்கள் தான் அதிகளவில் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது.

 இந்நிலையில்  விடைத்தாள் முறைகேட்டில் ஈடுபட்ட துணைத்தேர்வு கட்டுப்பாட்டாளர்  உள்பட எஸ்.ஸ்ரீனிவாசலு, கே.செல்வமணி, புகழேந்தி சுகுமாறன், கே. குலோத்துங்கன் ஆகிய பேராசிரியர்கள் 4 பேர்  நேற்று  பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.  விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில் துணைவேந்தர் சூரப்பா இந்த நடவடிக்கையை எடுத்ததுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment