அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு முன்னாள் மாணவர்கள் உதவ வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 28, 2019

அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு முன்னாள் மாணவர்கள் உதவ வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்

அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு முன்னாள் மாணவர்கள் உதவி செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 இதுதொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் பயின்று உயர் பதவியில், அல்லது தொழிலதிபர்களாக இருக்கும் முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும், CSR எனப்படும் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் அரசு பள்ளிகளை தத்தெடுத்து உதவலாம் என கூறப்பட்டிருக்கிறது.


 இதன்மூலம், பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட முன்வருமாறு, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அழைப்பு விடுத்திருக்கிறார்.

சமூக அக்கறை கொண்ட தொண்டு நிறுவனங்களும், அரப்பள்ளிகள் வளர்ச்சிக்கு உதவ அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 CSR எனப்படும், சமூக பொறுப்புணர்வு நிதி மூலம், 2018-2019ஆம் கல்வியாண்டில், 519 அரசு பள்ளிகளில், 58 கோடி ரூபாய் மதிப்பில், பள்ளிகள் உட்கட்டமைப்பு, போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றித் தெரிவித்துக் கொள்வதாகவும், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியிருக்கிறார். இதற்கிடையே, தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அனைத்து பள்ளிகளும் ஜூன் 3ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது




No comments:

Post a Comment