கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 17, 2019

கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆயுதப்படையின் ஒரு அங்கமான இந்திய கடலோர காவல்படையில் 'குரூப்-ஏ' பிரிவின் கீழ் வரும் கெசட்டடு அதிகாரி தரத்திலான உதவி கமாண்டன்ட் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் 'அசிஸ்டன்ட் கமாண்டன்ட் 1-2020' என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியான திருமணமாகாத இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஜெனரல் டியூட்டி
பணி: டெக்னிக்கல் என்ஜினீயரிங்
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: ஜெனரல் டியூட்டி மற்றும் டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பதாரர்கள் 1-7-1995 மற்றும் 30-6-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

பணி: கமர்சியல் பைலட் லைசென்ஸ்
வயதுவரம்பு: 1.7.1995 மற்றும் 30.6.2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: ஜெனரல் டியூட்டி மற்றும் டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பதாரர்கள் 01.07.1995 மற்றும் 30.06.1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கமர்சியல் பைலட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.1995 மற்றும் 30.06.2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஜெனரல் டியூட்டி (ஆண்-பெண்) மற்றும் ஜெனரல் டியூட்டி பைலட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ்-2 படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்.

பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல் கணித பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்கள் தேர்ச்சியுடன், கமர்சியல் பைலட் லைசென்சு பெற்றவர்கள் பைலட் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நுண்ணறிவுத் திறன் தேர்வுகள், உளவியல் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.06.2019

No comments:

Post a Comment