மாணவர் சேர்க்கை அதிகரிக்க அரசு பள்ளிகளுக்கு உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 26, 2019

மாணவர் சேர்க்கை அதிகரிக்க அரசு பள்ளிகளுக்கு உத்தரவு

அரசு பள்ளிகளில், கடந்தாண்டை விட, மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, நடப்பு கல்வியாண்டு தொடங்கவுள்ளது.


 இதனால், மாணவர் சேர்க்கை குறித்து, பள்ளி தலைமையாசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து, பள்ளி கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை:


 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தங்கள் அருகிலுள்ள, துவக்க, நடுநிலைப்பள்ளிகளிலிருந்து வெளியேறும் மாணவர்கள் அனைவரும், பள்ளிகளில் சேர்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துவருவதை, மக்களுக்கு தெரிவிக்க, துண்டு பிரசுரம் அச்சடித்து, விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்துவதோடு, தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இணைந்து, வீடு, வீடாக சென்று, மாணவர்களை பள்ளியில் சேர்க்க, பெற்றோருடன் பேச வேண்டும்.

பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட கூடுதலாக, ஏறுமுகத்தில் இருக்க வேண்டும்.

அதற்கேற்ப, அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளை, சிறப்பாக நடத்த வேண்டிய பொறுப்பு, தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment