பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.06.19 - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 11, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.06.19

அதிகாரம்:ஒப்புரவறிதல்

திருக்குறள்:215

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

விளக்கம்:

பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.

பழமொழி

Pluck not where you never planted

பிறர் உடைமைக்கு ஆசைப்படாதே

இரண்டொழுக்க பண்புகள்

1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப் படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி

நீங்கள் எது எதற்கெல்லாம் அன்பை வெளிப்படுத்த தயங்குகிறீர்களோ அது அத்தனையும்
 விட அன்பு உயர்வானது...

மார்க் லூயிஸ்

 பொது அறிவு

ஜூன் 12- இன்று உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்.

1. குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலம் எது?

ஆந்திர பிரதேசம்

2. உலக அளவில் ஆரம்ப பள்ளிகள் அதிகம் உள்ள நாடு எது?

சீனா

ஆரோக்ய வாழ்வு

புதினா சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் வெந்நீரில் கலந்து 3  நாள்களுக்கு ஒருமுறை ஆவிபிடித்தால் அழுக்குகள் அகன்று முகம் சுத்தமாகவும் வசீகரமாகவும் இருக்கும்.

Some important  abbreviations for students

*QA - Quantitative Ability

 *VA - Verbal Ability

நூலாசிரியர் - நூல்கள்

*கலைஞர் மு.கருணாநிதி*

குறளோவியம், சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி, பொன்னர்சங்கர், ரோமாபுரி பாண்டியன், தூக்குமேடை

இன்றைய கதை*

*நேர்மையான பிச்சைக்காரர்*

ஒரு மன்னனுக்கு ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஆசைப்பட்டான். அதை சோதிப்பதற்கு ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து விலையுயர்ந்த வைரக்கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான்.

பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம் கொடுத்து தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்த கனமான ரொட்டியையும் மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு பிச்சைக்காரனுக்கும் கொடு என்று சொன்னான்.

 நீண்ட அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போன்ற ஒரு நபருக்கு அந்தப் பணியாளன் வைரக்கற்கள் உள்ள ரொட்டியை அளித்தான். பிறகு மற்றொன்றை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தான்

சாமியார் போன்ற நபர் தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப்பார்த்து இது சரியாக பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று நினைத்து தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரனிடம் எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது.


 எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக்கொண்டு உன்னுடையதை எனக்குக்கொடு என்றான். உடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக்கொண்டனர்.

உடனே அந்த சாமியாரையும் பிச்சைக்காரனையும் பின் தொடருமாறு தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டான் மன்னன்.

 அன்று மாலையே மன்னனிடம் வேலையாட்கள் அவ்விருவரைப் பற்றிய தகவலை கூறினர்.


 சாமியார் போல் தோற்றமளித்தவர் தன் வீட்டுக்குச் சென்று பொய்த் தாடியை எடுத்துவிட்டு ஆசைதீர ரொட்டியை உண்டு விட்டு பிறகு பழையபடி தாடியை ஒட்ட வைத்துக்கொண்டு சாமியார் வேடத்தில் பிச்சை எடுக்க கிளம்பி விட்டதாகவும்  தன் வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரன்  தன் மனைவியுடன் ரொட்டியை உண்ணத் தொடங்கியதும் அதற்குள் இருந்த வைரக் கற்களைக் அவனும் அவன் மனைவியும் கண்டனர். வைரக்கற்களை நாமே எடுத்துக்கொள்ளலாம் என்று விரும்பினான்.
ஆனால் அந்தப் பிச்சைக்காரன் இந்த ரொட்டியை அளித்த அரசுப் பணியாளரிடம் இதைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.

 இவ்வாறு வைரக்கற்கள் உள்ளிருப்பது அவருக்குத் தெரியாது என்றால்இ அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும்.


 ஆனால்  தெரிந்தே இவ்வாறு கொடுத்தார் என்றால் இவை அந்தச் சாமியாரைச் சேர வேண்டும். அதுதான் நியாயம் என்று கூறியதாகவும் வேலையாட்கள் கூறினர்.


 அந்தப் பிச்சைக்காரனின் நேர்மையையும் உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த மன்னன் கடவுளின் அருளால் வைரக்கற்கள் ஒரு போலிச் சாமியாரிடம் சிக்காமல் நேர்மையான ஒரு பிச்சைக்காரனை அடைந்ததை எண்ணி மகிழ்ந்த மன்னன் பிச்சைக்காரனை
அரண்மனைக்கு அழைத்து அந்த வைரக்கற்களை அவனுக்கே கொடுத்து மேலும் பல பரிசுகளும் வழங்கினான்.

 பிச்சைக்காரரும் அதை விற்று கிடைத்தப் பணத்தில் வியாபாரம் செய்து சந்தோஷமாக வாழ்ந்தார்

இன்றைய செய்திகள்

12.06.2019

* கடந்த ஆண்டு கொடுத்த பேருந்து இலவச பயண அட்டைகளை மாணவ, மாணவிகள் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பயன்படுத்தலாம். அதற்குள் புதிய பேருந்து இலவச பயண அட்டைகள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

* இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சீறும் சினாபங்க் எரிமலை: 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சூழ்ந்த சாம்பல் புகையால் மக்கள் பீதி.
அரபிக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வாயு புயலாக உருவாகியுள்ளது. வாயு புயல் அதி தீவிர புயலாக மாறி குஜராத்தில் ஜுன் 13-ம் தேதி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* பி.இ. சேரும் மாணவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு மேலும் குறைய வாய்ப்பு: சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 14 ஆயிரம் பேர்.

* உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

Today's Headlines

🌸  students can use the free bus pass last issued year till September 2019.  The minister said that the new bus pass will be provided with in the month

 🌸 Signaling volcano on Sumatra island of Indonesia: People panicked by grey smoke surrounding for  7 km.

 🌸The atmospheric pressure in the Arabian Sea has evolved into a hurricane.  According to the Meteorological Center, the gas storm will become the most serious storm in Gujarat on June 13.

 🌸  For B.E  course ,the number of students enrolled is likely to fall further this year: 14 thousand people avoiding certificate verification

The match between the Sri Lankan and Bangladeshi teams in the World Cup Cricket had been dropped by rain.



No comments:

Post a Comment