சிறுபான்மையின மாணவிகள் நலன் காக்க புதிய திட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 11, 2019

சிறுபான்மையின மாணவிகள் நலன் காக்க புதிய திட்டம்

சிறுபான்மையினத்தைச் சேர்ந்த 5 கோடி மாணவிகளின் நலனை பேண புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுபான்மையினரின் பொருளாதார மற்றும் கல்வி நிலையை மேம்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்றார்.

குறிப்பாக சிறுபான்மையின மாணவிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி மாணவிகளுக்கு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்பட உள்ளதாக நக்வி தெரிவித்தார்.

No comments:

Post a Comment