அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.
ரேண்டம் எண்ணை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.
மாணவர்கள் ரேண்டம் எண்ணை www.eaonline.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். மேலும் 10 இலக்க ரேண்டம் எண், +2 தேர்வில் மாணவர்கள் பெற்ற கட்ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், வருகின்ற 6-ம் தேதி முதல் 11 வரை பொறியியல் கவுன்சலிங் உதவி மையங்களில் சான்றிதழ் சரிபாக்கும் பணி நடைபெறவுள்ளது.
இதை தொடர்ந்து மாணவர்களுக்கான இடஒதுக்கீடு, மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் 17-ம் தேதி வெளியிடப்படும்.
20-ம் தேதி சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கும், ஜூலை 3-ம் தேதி தரவரிசைப்பட்டியல் அடிப்படையிலான கவுன்சலிங்கும் தொடங்குகிறது.
மாணவர்கள் மனநிலையை பொறுத்துதான் படிப்பை தேர்வு செய்கிறார்கள் என்றும் கல்வியை திணிக்க முடியாது என்றும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பாலிடெக்னிக் படிப்புகள் மீதான ஆர்வம் இந்தாண்டு குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைகழகங்களில் பேராசிரியர்கள் மீது தவறுகள் அல்லது முறைகேடு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்வும் அவர் தெரிவித்துள்ளார். பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு கடந்த மாதம் 2-ம் தேதி துவங்கி 31-ம் தேதி முடிவடைந்தது.
இறுதியாக ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் பதிவு செய்துள்ளதுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குறைவான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 27 ஆயிரம் மாணவர்கள் குறைவாக விண்ணப்பித்து உள்ளனர்.
ஒரு லட்சத்து 75 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ள நிலையில், ஒரு லட்சத்து 33 ஆயிரம் இடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பொறியியல் படிப்பு சேர்க்கையில் ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment