ஓய்வு வயதை அறிவிப்பதில் குழப்பம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 9, 2019

ஓய்வு வயதை அறிவிப்பதில் குழப்பம்

மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் வீரர்களின், ஓய்வு வயது குறித்து முடிவு எடுப்பதில், மத்திய அரசு தாமதிப்பதால், ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, சாஷ்ட்ர சீமா பால், இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை, தொழில் பாதுகாப்பு படை ஆகியவற்றில், வீரர்கள் ஓய்வு வயதில், வெவ்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுவது தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம், மே, 10ம் தேதி விசாரித்தது.


அப்போது, 'வீரர்கள் ஓய்வு வயது தொடர்பாக, மத்திய அரசு உரிய முடிவை எடுக்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், இதுவரை, இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

 இதையடுத்து, வீரர்கள் ஓய்வு பெறுவது, அது தொடர்பாக விழா நடத்துவது, அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான நடைமுறைகள், கடந்த, 31லிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 இதனால், ஏராளமான வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன

No comments:

Post a Comment