பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, உருவ ஒற்றுமையுள்ள இரட்டையர், அபினவ் பதக் மற்றும் பரினவ் பதக், ராணுவ அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், ராணுவத்தில், ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்ற, உருவ ஒற்றுமையுள்ள இரட்டையர் என்ற வரலாற்றை படைத்துள்ளனர்.உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள, இந்திய ராணுவ அகாடமியில், சமீபத்தில், பயிற்சி முடித்தவர்களுக்கான அணிவகுப்பு நடந்தது. இதில் பயிற்சி முடித்தோர், ராணுவத்தில் அதிகாரிகளாக பணியாற்ற உள்ளனர். இவர்களில், அபினவ் பதக் மற்றும் பரினவ் பதக், அனைவரையும் கவர்ந்தனர். ஒரே உருவ ஒற்றுமை உள்ள இவர்கள், இரண்டு நிமிட வித்தியாசத்தில் பிறந்த, இரட்டையர்.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில், பள்ளிப் படிப்பை இருவரும் முடித்தனர்.
அதைத் தொடர்ந்து, இன்ஜினியரிங் படிப்பதற்காக, இருவரும் பிரிய நேரிட்டது. இருவருக்கும் வேறு வேறு நகரங்களில் உள்ள கல்லுாரியில் தான் இடம் கிடைத்தது. படிப்பை முடித்ததும், இருவரும், டேராடூனில் உள்ள, தேசிய ராணுவ அகாடமியில் சேர்ந்தனர்.
இவர்களின் உருவ ஒற்றுமையால், பலமுறை பயிற்சியாளர்களுக்கும், உடன் இருப்போருக்கும், நாம் யாரிடம் பேசுகிறோம் என்ற குழப்பம் ஏற்படுவது வழக்கம்.ஆனால், வெவ்வேறு குழு என்பதால், இவர்களுடைய சீருடையில் சிறிய மாற்றம் இருக்கும்.
அதை வைத்து தான், அடையாளம் காண முடியும். தற்போது, பயிற்சி முடித்த இவர்கள், வேறு வேறு படைப் பிரிவுகளுக்கு செல்ல உள்ளனர்; அதனால், வெவ்வேறு மாநிலங்களில் பணியாற்ற உள்ளனர்.
இது குறித்து, ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நம் ராணுவத்தில், பல இரட்டையர், உருவ ஒற்றுமை கொண்ட இரட்டையர் பயிற்சி பெற்றுள்ளனர். ஆனால், வெவ்வேறு இடங்களில் அல்லது வெவ்வேறு ஆண்டுகளில் பயிற்சி பெற்றுள்ளனர்.
எங்களுக்கு தெரிந்து, உருவ ஒற்றுமை உள்ள இரட்டையர், ஒரே ஆண்டில், ஒரே இடத்தில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளது, இதுவே முதல் முறை. இவ்வாறு, அவர் கூறினார்

No comments:
Post a Comment