மேலூர் அருகே பறவைகளுக்கு தண்ணீர் வழங்கும் மாணவர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 3, 2019

மேலூர் அருகே பறவைகளுக்கு தண்ணீர் வழங்கும் மாணவர்கள்

கோடையில் தண்ணீர் தேடி அலையும் பறவைகளுக்கு மரங்கள் மற்றும் அவை கூடு கட்டி இருக்கும் இடங்களை தேடி பள்ளி மாணவர்கள் தண்ணீர் வைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழையூர் ரெங்கசாமிபுரத்தை சேர்ந்த ஐடிஐ மாணவர் முருகன் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார்.


 நோபல் அறிவியல் மன்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி ஒவ்வொரு அரசு பள்ளிகளுக்கும் சென்று அறிவியல் குறித்து மாணவர்களுக்கு எளிய முறையில் விளக்கமும், பயிற்சியும் இலவசமாக அளித்து வருகிறார்.

நோபல் அறிவியல் மன்றத்தில் 5 முதல் 10ம் வகுப்பு மாணவர்களை உறுப்பினர்களாக வைத்துள்ளார்.

கோடை காலத்தில் பறவைகள் தண்ணீர் தேடி அலைவதையும், கண்மாய் குளங்களில் தண்ணீர் இல்லாமல் அவை அவதிப்படுவதையும் கண்ட இவர், மாணவர்கள் புகழ்குமார், பிரதாப், ஹேமந்த், ஈஸ்வரன் ஆகியோருடன் சேர்ந்து பறவைகளுக்கு தண்ணீர் வைக்கும் பணியில் ஈடுபட்டார்.

மரங்களின் மேல் ஏறி கிளைகளுக்கு இடையில் வெட்டப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில், பறவைகள் குடிப்பதற்கு வசதியாக தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்டது. இத்துடன் கருவேல மரங்களுக்கு இடையில் அதிகமாக பறவைகள் கூடு கட்டி வசிப்பது அறிந்து அப்பகுதியிலும் தண்ணீர் வைக்கப்பட்டது.

இவற்றை வாரம் ஒரு முறை ஆய்வு செய்து அதில் போதிய அளவு தண்ணீரை நிரப்பும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment