சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, June 25, 2019

சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

நீட்டிக்கப்பட்ட கோடை விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நான்கு சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


புதுச்சேரியில் கோடை வெயில் காரணமாக, ஜூன் 3ம் தேதி திறக்கப்பட இருந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, ஒரு வார காலத்திற்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. பின்பு, ஜூன் 10 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட கோடை விடுமுறை நாட்களுக்கு ஈடாக, 4 சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


அதன்படி வரும் ஜூலை 6 மற்றும் 20ம் தேதியும், ஆகஸ்ட் 3 மற்றும் 24ம் தேதி ஆகிய நான்கு சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான சுற்றறிக்கையை, பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் குப்புசாமி, அனைத்து பள்ளி முதல்வர் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment