அண்ணா பல்கலை கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு 24ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 16, 2019

அண்ணா பல்கலை கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு 24ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்

இன்ஜினியரிங் கலந்தாய்வில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு 24ம் தேதி முதல் சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

 இன்ஜினியரிங் கலந்தாய்விற்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் மே 1 தொடங்கி 31ம் தேதி வரை நடந்தது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கடந்த மாதம் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை நேரடி கலந்தாய்வு நடந்தது. இந்தநிலையில், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்கியது.

முதல் சுற்றில் சீட் தேர்வு செய்த மாணவர்களுக்கு ஜூலை 13ம் தேதி சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது

இந்தநிலையில், அண்ணாபல்கலைக்கழகம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில், அண்ணாப்பலகலைக்கழகத்தின் கீழ் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மெட்ராஸ் இஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய 3 கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் வரும் 24ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டும்.

 மாணவர்களுக்கான 11 நாள் சிறப்பு வகுப்பு ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது.

 மாணவர்கள் தங்களின் கட்டணத்தை www.aukdc.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment