மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 15, 2019

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு

2019 - 2020ம் ஆண்டில் அக்‌ஷய பாத்திரா திட்டத்தின் மூலம் 5000 பேருக்கு குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.


அக்‌ஷய பாத்திரா என்ற தொண்டு நிறுவனம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவை வழங்கி வருகிறது.


இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு  வழங்கும் திட்டத்தை அக்‌ஷய பாத்திரா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.


முதற்கட்டமாக திருவான்மியூர், வேளச்சேரி, அடையாறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.


 அதன்படி தற்போது 1000  மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் காலை உணவு வழங்கப்பட்டுவருகிறது.இந்நிலையில் இந்த நிதியாண்டில் இந்த திட்டத்தை 5000 குழந்தைகளுக்கு விரிவுபடுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.


 அதன்படி அதிக குழந்தைகள்  படிக்கும் பள்ளிகள் நிறைந்த பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தபடுடவுள்ளது. இதன்பிறகு சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.


சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 281 பள்ளிகளில்   85 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment