மத்திய அரசின் உத்தரவின் பேரில் 5, 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் தேர்வுகளால் இடைநிற்றலுக்கு வாய்ப்பில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
மத்திய அரசு இந்தியா முழுவதும் பள்ளிக் கல்வித்துறைக்காக ஒரு சட்டத்தை இயற்றி இருக்கிறது. அதன் வாயிலாக, 5 மற்றும் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற ஆணையை மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது. அந்த ஆணையை ஏற்று, தமிழக அரசு தற்போது அரசாணையாக வெளியிட்டுள்ளது.
பெற்றோர் வரவேற்பு:
இந்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
காரணம் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு உயர்நிலை படிப்பு மற்றும் மேல்நிலைப் படிப்புகளுக்கு மாணவர்கள் செல்லும்போது, தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொதுத் தேர்வுகளைச் சந்திக்க இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே, 5 மற்றும் 8-ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு வரும்போது, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எவ்வாறு கற்றுத் தருகிறார்கள், அவர்களது கற்றல்திறன் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்கு ஏதுவாக அமையும்.
மேலும் தமிழகத்தைப் பொருத்தவரை, இதற்காக 3 ஆண்டு காலம் முதல்வர் விதிவிலக்கு அளித்திருக்கிறார். தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படமாட்டாது. அதன் பிறகே இது முழுமையாக அமல்படுத்தப்படும்.
அப்போதுதான் இந்த வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் விவரங்கள் பட்டியலிடப்படும். 5, 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதால் இடைநிற்றலுக்கு வாய்ப்பே இல்லை என்றார் அவர்.

No comments:
Post a Comment