தேசிய கல்விக் கொள்கை மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கச் செய்யும்: தொல்.திருமாவளவன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 15, 2019

தேசிய கல்விக் கொள்கை மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கச் செய்யும்: தொல்.திருமாவளவன்

தேசிய வரைவு கல்விக் கொள்கை மாணவர்களின் இடைநிற்றல் சதவீதத்தை அதிகரிக்கச் செய்யும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

சென்னையில் இருந்து சனிக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது
தமிழக அரசு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவித்திருப்பது தேசிய கல்விக் கொள்கையில் இருக்கும் நடைமுறை.

இதனை எதிர்க்க வேண்டிய தமிழக அரசு மக்கள் நலனில் அக்கரை இல்லாமல், மத்திய அரசின் எல்லா நிலைப்பாடுகளையும் ஆதரிக்கிறது. கல்வித்துறையும் அப்படித்தான் இருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.

இந்த கல்விக் கொள்கை கிராமப்புற, ஏழை மாணவர்களின் இடைநிற்றலின் சதவீதத்தை அதிகரிக்கச் செய்யும். அவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு அவர்கள் குலத்தொழிலுக்கு செல்லும் நிலையை உருவாக்கும். இதனை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது என்றார் திருமாவளவன்

No comments:

Post a Comment