விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது
.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆனந்தன், கிருஷ்ணப்பிரியா, நடராஜன் உட்பட 268 அரசு பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய, கலெக்டர் அண்ணாதுரை பேசியதாவது:
மாநில அளவில் நாம் கல்வி பட்டியலில் முன்னேற, நன்றாக உழைக்க வேண்டியுள்ளது. பாடங்களை மாணவர்களுக்கு போதிப்பதில் புதிய அணுகுமுறையை ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டும்.
ஆசிரியர்கள் மட்டுமின்றி, தலைமை ஆசிரியர்களும் மாணவர்களின் கல்வி, தேர்ச்சி முறைகளை முறையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்
தலைமை ஆசிரியர்கள் தினமும் ஒரு வகுப்பறைக்காவது சென்று, மாணவர்கள் எப்படி பயில்கிறார் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்
.இதற்கு, அவர்களிடம் நீங்கள் பாட வாரியாக கேள்வி கேட்க வேண்டும். இன்டெர்னல் மதிப்பெண்ணில், மாணவர்களிடம் தனி விருப்பு, வெறுப்புகளின்றி ஆசிரியர்கள் மதிப்பெண் போட வேண்டும்.
இந்த மதிப்பெண் குறைவதால், மாணவர்கள் இளம் வயதில் அதிகமாக பாதிக்கும் சூழல் உள்ளது. பழிவாங்கும் நோக்கில், எந்தவொரு ஆசிரியர்களும் இது போன்ற செயலை செய்யக் கூடாது.படிக்கும் மாணவர்களை விடுத்து, பயிலாத மாணவர்களை வழிக்கு கொண்டு வரும் யுக்தியை காணுங்கள்.
அவர்களின் பெற்றோரை அழைத்து பேச வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளிலும் பெற்றோர், ஆசிரியர்களுக்கான கூட்டம் நடத்த வேண்டும்
.ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவர்களுக்கு போதிக்கும் முறைகள், சாப்பாடு சரியாக வழங்கப்படுகிறதா என்பதை மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்களும், பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும்.அனைத்து மாணவர்களையும் சமமாக பாவிக்க வேண்டும்.
மற்ற மாவட்டங்களில் பாடங்களில் என்ன புதிய அணுகு முறைகளை கடைபிடிக்கிறார்கள் என்பதை உற்று நோக்க வேண்டும். மாணவர்களுக்கு, நல்லொழுக்கங்களை போதியுங்கள்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்
.நிகழ்ச்சியில் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடந்தாண்டு குறைந்த தேர்ச்சி விழுக்காடு கொடுத்த, 20 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு, காலை, மாலை சிறப்பு வகுப்பு நடத்த அறிவுறுத்தினார்.
மேலும், சிறப்பு வகுப்பின்போது, மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க, ஒரு பள்ளிக்கு தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.

No comments:
Post a Comment