இந்த மாநிலத்தில் மே 1-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, April 10, 2020

இந்த மாநிலத்தில் மே 1-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஒடிஸா மாநிலத்தை தொடர்ந்து பஞ்சாபிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்  நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வருகிற மே 1-ஆம் தேதி வரை மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


முன்னதாக ஒடிஸாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் மே 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கரோனாவுக்கு இதுவரை 101 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 பேர் பலியாகினர்.

அதேசமயம் கரோனா பாதிப்பில் இருந்து 4 பேர் குணமடைந்தனர். கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக, கடந்த மாதம் 24-ஆம் தேதி பிரதமா் மோடி தேசிய ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டாா். இதன்படி 21 நாள்கள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment