கரோனாவுக்கு திருச்சியின் முதல் வெற்றி: மருத்துவக் குழுவினருக்கு ஆட்சியர் பாராட்டு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, April 10, 2020

கரோனாவுக்கு திருச்சியின் முதல் வெற்றி: மருத்துவக் குழுவினருக்கு ஆட்சியர் பாராட்டு

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு இளைஞர் (24) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

துபையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த இவருக்கு மாரச் 22 ஆம் தேதி கரோனா அறிகுறிகள் இருந்ததால் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


 இவருக்கு மார்ச் 24 ஆம் தேதி நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.  இவர் குணமடைந்து வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். திருச்சியின் முதல் நோயாளியும் இவரே. முதலில் குணமடைந்தவரும் இவரே என்பது தான் சிறப்பு

தன்னுயிரை துச்சமென நினைத்து, அரிய சேவையாற்றி வரும் மருத்துவக் குழுவினருக்கும், திருச்சி மாவட்ட கரோனா தடுப்புக் குழுவினருக்கும் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment