மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி - Minnal Kalvi Seithi

Breaking

Monday, April 13, 2020

மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.


கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

"கரோனா வைரஸ் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக வல்லரசு நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால், இந்தியாவில் பாதிப்புகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கக்கூடும்.

இதை மேலும் கட்டுப்படுத்துவதற்காக மே 3-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த காலத்தில் நாம் மேலும் கவனமாக இருக்க வேண்டும்" என்று பேசி வருகிறார்.

No comments:

Post a Comment