அந்த ஊருக்கு மனுஷன் போவானா? சொந்த நாட்டிற்கே செல்ல மறுத்த அமெரிக்கர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, April 13, 2020

அந்த ஊருக்கு மனுஷன் போவானா? சொந்த நாட்டிற்கே செல்ல மறுத்த அமெரிக்கர்கள்

அமெரிக்க அரசு சிறப்பு விமானம் அனுப்பியும், இந்தியாவில் சிக்கியிருக்கும் பல அமெரிக்கர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல மறுத்துவிட்டனர்


. இதற்கு காரணம், அமெரிக்காவில் கொரோனா அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் ஊரடங்கு மூலம் அதன் பரவல் பெரிய அளவில் இல்லாததுதான் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.



 கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். அதைத்தொடர்ந்து அனைத்து வகை போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. வெளிநாட்டு விமான சேவைகளும் வாபஸ் பெறப்பட்டன.

இதனால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பல அமெரிக்கர்கள் மற்றும் இங்கு பணியாற்றும் அமெரிக்கர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் இங்கேயே சிக்கிக் கொண்டனர்.


 இதனால் அவர்களை தாய்நாட்டிற்கு அழைத்து செல்வதற்காக சிறப்பு விமானங்களை இயக்க அமெரிக்க அரசு முடிவு செய்தது. இதன்படி நேற்று இரண்டு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.

ஆனால், அமெரிக்காவில் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால், அங்கு 5.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


இன்னும் 15 நாட்களில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை தொடும் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. இதனால் அமெரிக்கர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்களில் பலர், சிறப்பு விமானம் இயக்கப்பட்டபோதும் சொந்த ஊருக்கு செல்ல மறுத்துவிட்டனர். தாங்கள் இந்தியாவிலேயே இருக்க அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


சொந்த நாடுகளுக்கு திரும்புவதில் சிக்கல்

இந்தியாவில் சிக்கி உள்ள வௌிநாட்டினர்,விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இதனால் இந்தியாவில் இருப்பவர்களுக்கு விசா முடிந்திருந்தால், அவை வரும் 30ம் தேதி வரையில் நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் விசா காலாவதியான பல வெளிநாட்டவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment