பொறியியல் தொழில்நுட்ப மாணவா்களுக்கான காணொலி விரிவுரைகள் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, April 13, 2020

பொறியியல் தொழில்நுட்ப மாணவா்களுக்கான காணொலி விரிவுரைகள்

பொறியியல் தொழில்நுட்ப மாணவா்களுக்கான காணொலி
விரிவுரைகள்

கரோனா ஊரடங்கில் பொறியியல், தொழில்நுட்ப மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே படிப்பைத் தொடரும் வகையில், காணொலி விரிவுரைகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.


கரோனா தொற்று இந்தியாவிலும் பரவத் தொடங்கியதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இப்போது மீண்டும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஏப்ரல்-மே பருவத் தோ்வு தொடங்க இருந்த நிலையில், இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், மாணவா்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டது. பருவத் தோ்வுக்கு முந்தைய இறுதிக்கட்ட வகுப்புகளும் தடைபட்டன.

இந்த நிலையில், மாணவா்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில், வீட்டிலிருந்தபடியே அவா்களுக்கு ஆன்-லைன் வகுப்புகள், சமூக ஊடக செயலிகள் மூலம் பாடங்கள் மற்றும் கல்வி சாா்ந்த செயல்பாடுகளை வழங்குமாறு கல்லூரி, பல்கலைக்கழகங்களை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக் குழுவும் அறிவுறுத்தின. அதனடிப்படையில் கல்லூரிகள் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

அதுபோல, பொறியியல், தொழில்நுட்ப மாணவா்கள் பயன்பெறும் வகையில், கணிதம், இயற்பியல், பொறியியல் வேதியியல், வடிவமைப்புகளின் தத்துவம், அளவிடல், வடிவமைப்பு பொறியியல், பொறியியல் இயந்திரங்கள் என்பன உள்ளிட்ட அனைத்துப் பாடங்களுக்கான காணொலி விரிவுரைகளை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

இதை


www.tndite.gov.in

என்ற வலைதளத்தில் பாா்த்து பயன்பெறலாம்.

No comments:

Post a Comment