99.8% ஐ.டி. ஊழியர்களால் வீட்டிலிருந்து சரியாக வேலை செய்ய முடிவதில்லை - Minnal Kalvi Seithi

Breaking

Friday, April 10, 2020

99.8% ஐ.டி. ஊழியர்களால் வீட்டிலிருந்து சரியாக வேலை செய்ய முடிவதில்லை

தகவல் தொழில்நுட்பத் துறையில் 99.8 சதவிகிதத்தினரால் வீட்டிலிருந்து, வெளியேயிருந்து சரியாக வேலை செய்ய முடியவில்லை என்று ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் 0.2 சதவிகிதத்தினர் மட்டுமே வீட்டிலிருந்து வேலை செய்வதிலும் திறம்படப் பணிபுரிவதிலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் என்றும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது

இந்த ஆய்வை சிக்கி மைண்ட்மேட்ச் என்ற நிறுவனம் நடத்தி முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.


கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில் அனைத்து தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைசெய்யப் பணித்திருக்கின்றன.

"அறிந்துகொள்வதில் (95%), நடைமுறைத் தகவல் தொடர்புத் திறனில் (65%), திட்டமிடுதலிலும் செயற்படுத்துவதிலும் (71%) என  ஏதாவதொரு விஷயத்தில் 99.8 சதவிகிதத்தினர் பின்தங்கியிருக்கின்றனர்.

"16.97 சதவிகிதத்தினர் சவாலை எதிர்கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு சவால் மிக்க பணிகளை வழங்கினால் மிகச் சிறப்பாகச் செயலாற்றுவார்கள்.

"ஊழியர்களில் 17 சதவிகிதத்தினர் கட்டளையிட்டால் மட்டும் பின்பற்றக் கூடியவர்களாக இருக்கிறார்கள். என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இவர்களுக்குத் தெளிவாக அறிவுறுத்த வேண்டும்.


"இத்தகைய ஊழியர்களைப் பார்க்க, ஒவ்வொருவருக்குமான பணிகளை யாரேனும் ஒருவர் மிகவும் கவனமாகக் கண்காணிக்க வேண்டியிருக்கிறது" என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment