சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் முக்கிய வேண்டுகோள் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, April 12, 2020

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் முக்கிய வேண்டுகோள்

காய்ச்சலோ, இருமலோ, மூச்சு விடுவதில் சிரமமோ இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தமிழகத்தில் சனிக்கிழமை மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. இதில் மிக அதிகபட்சமாக சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இரண்டாவதாக கோவையில் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

இந்த பரிந்துரையை ஏற்று நாடு முழுவதும் பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தநிலையில், சனிக்கிழமை இரவு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.


இந்நிலையில், நோய்த்தொற்று நடவடிக்கையில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தனது டிவிட்டர் பக்க பதிவில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அதில், காய்ச்சல், இருமல் அல்லது மூச்சு விடுவதில் சிரமமோ இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கைக்குட்டையை முகக்கவசமாய் பயன்படுத்திக் கொண்டு செல்லுங்கள். மேலும் தயவு செய்து வீட்டில் இருந்துகொண்டே சுயமருத்துவம் செய்யாதீர்கள், தொலைபேசியில் மருத்துவர்களை தொடர்புகொண்டுகூட அறிவுரை கேட்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment