10ம் வகுப்பு தேர்வர்களுக்கு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு ; அமைச்சர் செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 12, 2020

10ம் வகுப்பு தேர்வர்களுக்கு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு ; அமைச்சர் செங்கோட்டையன்

''பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், ஜூன், 1ம் தேதி, 10ம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு துவங்குகிறது. மொத்தம், 3,575 மையங்களில், 8.34 லட்சம் தேர்வர்கள் எழுதுகின்றனர்



. 10 கி.மீ.,க்கு மேல், எந்த தேர்வு மையங்களும் இருக்காது.பெற்றோர் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, அனைத்து தேர்வர்களுக்கும், பஸ் வசதி ஏற்பாடு செய்யப்படும். தேர்வர்கள் எந்த இடத்தில் இருந்தாலும், பஸ்சில் தேர்வுக்கு அழைத்து வரப்படுவர். தேர்வு முடிந்ததும், அதே பஸ்சில், இருப்பிடத்துக்கு கொண்டு சென்று விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதற்காக, அந்தந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம், தேர்வர்களின் இருப்பிட விபரங்கள் கேட்டு பெறப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு முடிந்த பின், தேர்வர்கள் அமர்ந்திருந்த இருக்கைகள், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும்



.தேர்வு துவங்க, இன்னும், 18 நாட்களே உள்ளன. அதனால், போர்க்கால அடிப்படையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. தமிழகத்தில், 3.72 லட்சம் ஆசிரியர்கள் உள்ளதால், தேவைக்கேற்ப தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment