தஞ்சை மாவட்ட ஆசிரியர்கள் வழங்கிய நிவாரண பொருட்கள் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, May 12, 2020

தஞ்சை மாவட்ட ஆசிரியர்கள் வழங்கிய நிவாரண பொருட்கள்

தஞ்சை மாவட்டத்தில், ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு, ஆசிரியர்கள் சொந்த செலவில், 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கி உள்ளனர்.


தஞ்சாவூர் மாவட்ட கல்வித் துறை சார்பில், அரசு பள்ளி ஆசிரியர்கள், தங்களது சொந்தப் பணத்தில், ஏழை மாணவர்கள் குடும்பங்களுக்கு, நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டது


. இதன்படி, மாவட்டத்தில் உள்ள, 136 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த, 133 தலைமையாசிரியர்கள், 409 ஆசிரியர்கள், 28 அலுவல பணியாளர்கள் இணைந்து, 4,950 மாணவர்களின் குடும்பங்களுக்கு, 25.54 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கி உள்ளனர்.இதே போல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த, 95 தலைமை ஆசிரியர்கள், 1,562 ஆசிரியர்கள் மற்றும், 166 அலுவலக பணியாளர்கள் இணைந்து, 6,287 ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு, 30.21 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கி உள்ளனர்.


மொத்தத்தில், தஞ்சை மாவட்டத்தில், 55.75 லட்சம் ரூபாய் மதிப்பில், 11 ஆயிரத்து, 237 மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கு, தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment