பொறியியல் கலந்தாய்வுக்கு அரசு தயார்: உயர்கல்வித்துறை அமைச்சர் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, May 12, 2020

பொறியியல் கலந்தாய்வுக்கு அரசு தயார்: உயர்கல்வித்துறை அமைச்சர்


 பொறியியல் கலந்தாய்வு பணிககள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: பொறியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு , கலந்தாய்வு, என அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. 12~ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கிய உடனே கலந்தாய்வுக்கான அட்டவணை வெளியிடப்படும்.மேலும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின்னரே கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். தற்போது தனிமைப்படுத்தும் முகாம்களாக கல்லூரிகள் மற்றும் விடுதிகள் செயல்படுவதால் இப்போதைக்கு செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து எதுவும் கூற முடியாது. 


தொடர்ந்து அவர் கூறுகையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது குறித்து அண்ணாபல்கலை., துணைவேந்தர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் ஆகியோரின் ஆலோசனைக்குபின்னரே வெளியிடப்படும் என கூறினார்.

No comments:

Post a Comment