இந்த மாநிலத்தில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களை தவிர அனைவரும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி - Minnal Kalvi Seithi

Breaking

Friday, May 8, 2020

இந்த மாநிலத்தில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களை தவிர அனைவரும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி

மகாராஷ்டிராவில் அனைத்து பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களை தவிர மற்றவர்கள் ஆல்பாஸ் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை மாதத்தில் தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா முழு அடைப்புக்கு மத்தியில் கல்லூரி மாணவர்களின் தேர்வை ரத்து செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. 


மாநிலத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கும் முதல் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அனைவரையும் எந்தவொரு பரீட்சையும் இன்றி அடுத்த வகுப்பிற்கு அனுப்ப மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும், மூன்றாம் ஆண்டு மாணவர்களை தேர்வின் அடிப்படையிலேயே உயர்த்த முடிவு செய்துள்ளது.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா மாநில உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் உதய் சமந்த் கூறியதாவது; 


கொரோனா ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும், இறுதி ஆண்டில் தவிர, அனைத்து வகுப்பு மாணவர்களும் பரீட்சை இல்லாமல் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்படுவார்கள்.


 இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், மும்பை பல்கலைக்கழகம் போன்ற மாநிலத்தின் சிறந்த பல்கலைக்கழகங்கள் இப்போது முதல் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களை தேர்வுகள் அன்றி அடுத்த வகுப்பிற்கு அனுப்பும் என தெரிகிறது.


இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்றும், தேர்வுகளுக்கான தேதி ஜூலை மாதம் வாக்கில் அறிவிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே வியாழக்கிழமை, முதல்வர் ஆதித்யா தாக்கரே பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவிப்பை வெளியிடும் வகையில் நேற்றைய தினம் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இன்று தாக்கரேவின் அறிவிப்புக்கு ஒரு நாள் கழித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இதற்கிடையில், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இந்த முடிவில் அதிருப்தி அடைந்துள்ளனர். 

No comments:

Post a Comment