10ம் வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவு விபரம் சேகரிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 11, 2020

10ம் வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவு விபரம் சேகரிப்பு


10ம் வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவு விபரம் சேகரிப்பு


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிக்க, வருகை பதிவேட்டை, கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு, பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1க்கும், ஒரு பாடத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அனைத்து பள்ளிகளும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களின் வருகை பதிவை, மார்ச், 21 வரை முழுமையாக உள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும்.

பின்னர், அந்த வருகைப் பதிவேட்டை, ஒவ்வொரு பிரிவு வாரியாக கட்டி, மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை, மாவட்ட கல்வி அலுவலகத்தில், கிருமி நாசினி தெளித்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் பெற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment