மாணவர்கள் மனநிலையை மாற்ற 'டேக் இட் ஈஸி!' 'மிஸ்டு கால்' கொடுத்தால் ஆலோசனை வரும்: சிறந்த கருத்துக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 11, 2020

மாணவர்கள் மனநிலையை மாற்ற 'டேக் இட் ஈஸி!' 'மிஸ்டு கால்' கொடுத்தால் ஆலோசனை வரும்: சிறந்த கருத்துக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்

மாணவர்கள் மனநிலையை மாற்ற 'டேக் இட் ஈஸி!' 'மிஸ்டு கால்' கொடுத்தால் ஆலோசனை வரும்: சிறந்த கருத்துக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாணவர்களின் மனநிலையை சீரமைக்க, பரிசு வழங்கும் திட்டத்துடன், 'மிஸ்டு கால்' மூலம் 'டேக் இட் ஈஸி' ஆலோசனை நிகழ்ச்சியை கல்வித்துறை மாற்றி அமைத்துள்ளது.



மார்ச் மாதம் நடக்கவிருந்த தேர்வுகள் கொரோனா பாதிப்பினால், தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு பின்னர், ஜூன் 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர், தேர்வுகளை மீண்டும் ஜூன் 15ம் தேதியாக மாற்றியது. இவ்வாறு தேர்வுகளில் மாற்றம் மற்றும், கொரோனா தொற்று பாதிப்புகள் போன்ற பிரச்னைகளால், மாணவர்களின் மனநிலையை பாதிக்காமல் இருப்பதற்கும், பொதுத்தேர்வு குறித்த அச்சத்தை நீக்கவும், கொரானோ பரவாமல் தடுப்பு வழிகளை பின்பற்றுவதற்கும் ஆலோசனை வழங்க கல்வித்துறை ஏற்பாடு செய்தது

.இதன்படி, 92666~17888 என்ற எண்ணுக்கு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், 'மிஸ்டுகால்' அளிக்கலாம். அதைத்தொடர்ந்து, இலவச இணைப்பு எண்ணிலிருந்து ஒரு அழைப்பு மாணவர்களுக்கு வருகிறது. 

இதில் தேர்வு குறித்து, கதையாக ஒரு உரையாடல் மற்றும் மாணவர்களுக்கான வினா விடை, சந்தேகங்களை அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டது. தற்போது, பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முழுமையாகவே ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதனால், தேர்வுக்கு முழுமையாக இருந்த மாணவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் வாய்ப்புள்ளது.மேலும், தேர்வு இல்லாததால், அடுத்தகட்ட நிலை குறித்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மனநிலையிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

அதற்கும், வழிசெய்யும் வகையில், 'டேக் இட் ஈஸி', 'மிஸ்டு கால்' நிகழ்ச்சியை மாற்றி அமைத்து கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 

மாணவர்கள் வழக்கம் போல் அந்த எண்ணுக்கு 'மிஸ்டுகால்' வழங்கலாம்.அதிலிருந்து வரும் அழைப்பில், கருத்துடன் கூடிய உரையாடல் நிகழ்த்தப்படுகிறது. 

அந்த உரையாடல் குறித்து, மாணவர்களின் கருத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். சிறந்த கருத்துகளுக்கு பரிசுகளும் வழங்கப்படுவதாக, இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment