மாணவர்களுக்கு இந்த தேதிக்குள் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, June 27, 2020

மாணவர்களுக்கு இந்த தேதிக்குள் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களுக்கு இந்த தேதிக்குள் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்'ஜூலை, 6ம் தேதிக்கு பின், மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபி குள்ளம்பாளையம், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறியதாவது:

கொரோனா சூழலில், மாணவர்களுக்கு எவ்வாறு கல்வி போதிப்பது என்பது குறித்து, அதற்காக அமைக்கப்பட்ட குழுவுடன் ஆலோசிக்கப்படும்.

கல்வி தொலைக்காட்சி வாயிலாக, எந்த நேரத்தில் கல்வி போதிப்பது என்ற விபரங்கள், விரைவில் பட்டியலிடப்படும். நான்கு சேனல்கள் வாயிலாக, கல்வி போதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் அனைத்தையும், மாவட்ட வாரியாக அனுப்பி, அங்கிருந்து பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது.

வரும், 30ம் தேதிக்குள், அனைத்து பள்ளிகளிலும், பாடப்புத்தகங்கள் இருக்கும். மாணவர்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில், பள்ளிகளுக்கு வரவழைத்து, சமூக விலகலுடன், பாடப்புத்தகங்கள் வழங்கலாமா என, ஆலோசித்து வருகிறோம். ஜூலை, 6ம் தேதிக்கு பின், முதல்வரின் அனுமதி பெற்று, பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்போதைய சூழ்நிலையில், பள்ளிகளை திறப்பது சாத்தியமாக இருக்காது. அதே நேரத்தில், சூழ்நிலை மாறும் போது, எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பதை, கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள், அமைச்சர்கள் ஆகியோரிடம் கலந்து பேசிய பின், முதல்வர் அறிவிப்பார்.

 முதல்வரிடம் ஒப்புதல் பெற்றபின், 'ஆன்லைன்' கல்வி குறித்து அறிவிக்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment