சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; 2வது இடத்தில் சென்னை மண்டலம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 15, 2020

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; 2வது இடத்தில் சென்னை மண்டலம்

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; 2வது இடத்தில் சென்னை மண்டலம்
சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 15) வெளியானது. இதில் சென்னை மண்டலம் 2வது இடத்தை பிடித்தது.

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் 10ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் நடைபெற்றது. 

சில பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்ற போதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க கடந்த மாதம் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது

இதனால் மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கீடும் பணியில் சிபிஎஸ்இ ஈடுபட்டு வந்தது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 13ம் தேதி வெளியான நிலையில், இன்று (ஜூலை 15) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

 மாணவர்கள் http://cbseresults.nic.in/என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மொத்தம் பதிவு செய்த 18,85,885 மாணவர்களில் 18,73,015 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 17,13,121 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 91.46 சதவீதத்தினர் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.36 சதவீதம் அதிகமாகும்.

மண்டல வாரியாக தேர்ச்சி விகிதம்

திருவனந்தபுரம் - 99.28 சதவீதம்
சென்னை - 98.95 சதவீதம்
பெங்களூரு - 98.23 சதவீதம்
புனே - 98.05 சதவீதம்
அஜ்மர் - 96.93 சதவீதம்
புவனேஷ்வர் - 93.20 சதவீதம்
போபால் - 92.86 சதவீதம்
சண்டிகர் - 91.83 சதவீதம்
பாட்னா - 90.69 சதவீதம்
டேராடூன் - 89.72 சதவீதம்
பிரக்யாராஜ் - 89.12 சதவீதம்
நொய்டா - 87.51 சதவீதம்
டில்லி மேற்கு - 85.96 சதவீதம்
டில்லி கிழக்கு - 85.79 சதவீதம்
கவுகாத்தி - 79.12 சதவீதம்

No comments:

Post a Comment