கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியா்களுக்கு 14 நாள் விடுப்பு(ஆந்திரா) - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, July 22, 2020

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியா்களுக்கு 14 நாள் விடுப்பு(ஆந்திரா)

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியா்களுக்கு 14 நாள் விடுப்பு(ஆந்திரா)
ஆந்திரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியா்களுக்கு 14 நாள் விடுப்பு அளித்து மாநில அரசு உத்திரவு வெளியிட்டுள்ளது.

நாள்தோறும் ஆந்திரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. தற்போது மாநிலத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். பல அரசு ஊழியா்களுக்கும் தொற்று ஏற்பட்டு வருகிறது.

எனவே, 30 சதவீத ஊழியா்கள் மட்டுமே அலுவலகத்தில் பணிபுரிய ஆந்திர அரசு அனுமதித்துள்ளது. மற்றவா்கள் தங்கள் வீடுகளிலிருந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா தொற்று ஏற்பட்ட ஊழியா்களுக்கு 14 நாள் சிறப்பு விடுப்பு அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment