தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இஎஸ்ஐ சட்டம் பொருந்தும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...! - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, July 28, 2020

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இஎஸ்ஐ சட்டம் பொருந்தும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இஎஸ்ஐ சட்டம் பொருந்தும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இஎஸ்ஐ சட்டம் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு  இஎஸ்ஐ சட்டம் பொருந்தும் என தமிழக அரசு 2010-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ஏற்கனவே, இது தொடர்பான வழக்கு 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், தற்போது இதனை அமல்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டார்.

ஆனால், கேரள நீதிமன்ற உத்தரவுப்படி இதனை அமல்படுத்தலாம் என  மற்ற ஒரு நீதிபதி உத்தரவிட்டார்.

எனவே, நீதிபதிகளுக்கு இடையே முரணான தீர்ப்பு உள்ளதால், வழக்கை 3 பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பளிக்க அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

 முதன்முறையாக 3 பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கினை விசாரித்த வரலாற்று முதன்முறயைாக நிகழ்ந்தது. இந்திய நீதித்துறையில் இது ஒரு சரித்திர நிகழ்வாக பார்க்கப்பட்டது.


 இதன்படி இந்த வழக்கு 3 பெண் நீதிபதிகள்  புஷ்பா சத்தியநாராயணன், அனிதா சமந்த், பி.டி உஷா ஆகியோர் அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இஎஸ்ஐ சட்டம் பொருந்தும் என 3 பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிரடியாக தீர்பளித்துள்ளது

No comments:

Post a Comment