பொறியியல் படிப்பில் இறுதியாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டம்..!! - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, July 28, 2020

பொறியியல் படிப்பில் இறுதியாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டம்..!!

பொறியியல் படிப்பில் இறுதியாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டம்..!!

பொறியியல் படிப்பில் இறுதியாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது

. கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.


 குறிப்பாக தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் இறுதியாண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

 இந்நிலையில் இறுதியாண்டு தேர்வை நிச்சயமாக நடத்த வேண்டும்.

ஏனெனில் அடுத்தகட்டமாக மாணவர்கள் வேலைக்கு செல்வதற்கோ அல்லது பட்டப்படிப்பை முடிப்பதற்கோ இறுதியாண்டு தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று பல்கலைக்கழக மானிய குழு ஏற்கனவே அறிவுறுத்தியிருக்கிறது.

அதன்படி இறுதியாண்டு தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வந்தது.

 தற்போது பொறியியல் படிப்பில் இறுதியாண்டு தேர்வை ஆன்லைன் மூலமாக நடத்தலாம் என அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருக்கிறது.

இதற்காக சிறப்பான மென்பொருள் தயாரிக்கக்கூடிய பணியை அண்ணா பல்கலைக்கழகம் துவங்கியுள்ளது.

ஆன்லைனில் தேர்வு நடத்துவதற்கான நவீன மென்பொருளை தயாரித்து அதன் மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக டெண்டரும் கோரப்பட்டிருந்தது.

 விரைவில் தனியார் நிறுவனங்கள் ஏதேனும் நவீன மென்பொருள் தயாரித்து, அண்ணா பல்கலைக்கழகத்திடம் அணுகும் போது அதனை முழுவதுமாக பரிசீலித்து அதன் பின்னர் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்திருக்கிறது

No comments:

Post a Comment