தனியார் பள்ளிகள் மதிப்பெண் பட்டியல் விளம்பர பலகை வைக்கக் கூடாது: அமைச்சர் செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 28, 2020

தனியார் பள்ளிகள் மதிப்பெண் பட்டியல் விளம்பர பலகை வைக்கக் கூடாது: அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகள் மதிப்பெண் பட்டியல் விளம்பர பலகை வைக்கக் கூடாது: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தற்போதைக்கு இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

 கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்.


ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

 மேலும் ஆன்லைன் வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில் தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை 40% வசூலித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என செய்திகள் வெளியாகின.

ஆனால், ஆகஸ்ட் 3ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது என்றும் தற்போதைய சூழலில், மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்தது.

இந்நிலையில் இன்று  செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தற்போதைக்கு இல்லை.

அடுத்த மாதம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து தெரிவிக்க உள்ளோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன

மதிப்பெண் முறையிலா கிரேடு முறையிலா என்பதை வெளியிட்டவுடன் தெரிந்து கொள்வீர்கள், என கூறியுள்ளார்.

மேலும், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை விளம்பரப்படுத்த கூடாது.

மீறி விளம்பரப்படுத்தும் பள்ளிகள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment