சத்துணவுக்கான தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் சேரும்: அரசின் முடிவுக்கு எதிர்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 28, 2020

சத்துணவுக்கான தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் சேரும்: அரசின் முடிவுக்கு எதிர்ப்பு

சத்துணவுக்கான தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் சேரும்: அரசின் முடிவுக்கு எதிர்ப்பு
தமிழகம் முழுவதும் மாணவர்களின் சத்துணவுக்கு உரிய தொகையை மாணவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கும் தமிழக அரசின் முடிவுக்கு, சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாநில பொது செயலாளர் ராமமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழகம் முழுவதும் சத்துணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி செயல்படாத நாட்களுக்கு சத்துணவுக்கு உரிய தொகையை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வரவேற்கக் கூடியதாக இருக்கும்.

 ஆனால் நடைமுறையில் இதை தவிர்க்க வேண்டும். அங்கன்வாடி குழந்தைகள் முதல் உயர்நிலைப் பள்ளி வரை அனைத்து குழந்தைகளுக்கும் தினமும் சமைத்த சூடான சத்துணவும், முட்டையும் வழங்குவது தான் சரியானது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பதற்றமும், பயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டு சத்துணவு கடந்த மார்ச் 17 முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சத்துணவுக்குரிய தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் யோசனை நிச்சயம் உதவாது. அந்த பணம், குழந்தைக்காக ஒதுக்கி செலவிட இயலாத சூழல் உள்ளது.

 குடும்ப செலவில் அது செலவாகி விடும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மேலும் சத்துணவு சமைக்க அரசு தற்போது வழங்கப்போகும் தொகையை கொண்டு, அந்த குடும்பத்தில் குழந்தைக்கு சத்துணவு, முட்டை ஆகியவை தினமும் வழங்க முடியாது. 

உத்தரவாதமும் இல்லை.எனவே தமிழக முதல்வர் சத்துணவுக்குரிய தொகையை பணமாக தராமல், அந்தந்த ஊரில் பள்ளிகள் மூலம், சமைத்த சூடான சத்துணவு தினமும் வழங்க வேண்டும். அதை மூடப்பட்ட பாத்திரங்கள் மூலம் (டிபன் பாக்ஸ் )பெற்று சென்று சாப்பிடலாம் என்றார்.

No comments:

Post a Comment