100% கட்டணம் செலுத்த சொல்லி பெற்றோர்களை நிர்பந்தித்தால் கடும் நடவடிக்கை:மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 25, 2020

100% கட்டணம் செலுத்த சொல்லி பெற்றோர்களை நிர்பந்தித்தால் கடும் நடவடிக்கை:மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்

 100% கட்டணம் செலுத்த சொல்லி பெற்றோர்களை நிர்பந்தித்தால் கடும் நடவடிக்கை:மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்

கொரோனா காலத்தில் முழு கல்வி கட்டணம் செலுத்த சொல்லி பெற்றோர்களை பள்ளிகள் நிர்பந்தித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 

கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் முழு கல்வி கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது. அது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்ட போது நீதிமன்றமும், மாணவர்களிடம் தவணை முறையில் தான் கட்டணம் வசூலிக்க வேண்டும்.

 100 சதவீதம் கட்டணம் செலுத்த சொல்லி நிர்பந்திக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவுகளை மீறி சில தனியார் பள்ளிகள் முழு கல்வி கட்டணத்தை செலுத்த சொல்லி பெற்றோர்களை நிர்பந்திப்பதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்தன

. இந்நிலையில் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


அதில் 100 சதவீதம் கல்வி கட்டணத்தை செலுத்த சொல்லும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ புகார் அளித்தால் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் நீதிமன்ற உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் முழு கல்வி கட்டணம் வசூலிப்பது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எனவே அவர்கள் மீது அபராதம் கோரலாம். அதேபோல் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேள்வி கேட்கலாம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இந்த சுற்றறிக்கை மூலமாக எடுக்க வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment