இளநிலை படிப்பிற்கு சான்றிதழ் பதிவேற்றாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: அமைச்சர் தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 25, 2020

இளநிலை படிப்பிற்கு சான்றிதழ் பதிவேற்றாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: அமைச்சர் தகவல்

 இளநிலை படிப்பிற்கு சான்றிதழ் பதிவேற்றாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: அமைச்சர் தகவல்

தமிழக  உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 3,16,795 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர்.

 இதில் 2,18,810 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். 1,35,832 பேர் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். சான்றிதழ் பதிவேற்றம் 1.8.2020 முதல் 10.8.2020 வரை நடந்தது. 

இணையதளத்தில் பதிவு செய்து கட்டணம் செலுத்தி சான்றிதழ் பதிவேற்றம் செய்யாதவர்கள் சான்றிதழ்களை www.tngasa.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர பதிவு செய்துள்ள மாணவர்களின் தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகள் இணையதளத்தில் இன்று (26ம் தேதி) வெளியிடப்படும்.

 அந்தந்த கல்லூரி இணையதளம் மூலம் சேர்க்கை கட்டணம் செலுத்தி மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம். அசல் சான்றிதழ் சமர்ப்பித்தலை பொறுத்தவரை அந்தந்த மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படும் நாள் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் நேரில் சென்று சான்றிதழ்களை சமர்ப்பித்து ஒப்புகை பெறலாம். 

வெளிமாவட்டத்தில் உள்ளவர்கள் www.tngasa.in இணையதளத்தில் உள்ள விவரப்படி அவர்கள் வசிக்கும் மாவட்டத்திலுள்ள மாவட்ட சேவை மையத்தில் நேரில் சென்று சான்றிதழ்களை சமர்ப்பித்து ஒப்புகை பெறலாம்.

No comments:

Post a Comment