10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க முடியாது: தமிழக அரசு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, August 25, 2020

10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க முடியாது: தமிழக அரசு

 10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க முடியாது: தமிழக அரசு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தனித் தேர்வர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததைப் போல, 10ம் வகுப்பு தேர்வு எழுதும் தனித் தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி பத்தாம் வகுப்பு மாணவரின் தந்தை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.


அந்த பதில் மனுவில், அக்டோபர்  2வது வாரத்துக்குள் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் இறுதியில் தேர்வு நடக்கிறது. அக்டோபரில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.


பள்ளி மாணவர்களைப் போல, பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment