இன்று பிற்பகல் 3 மணி முதல் +1 விடைத்தாள் நகல் வழங்கப்படும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, August 25, 2020

இன்று பிற்பகல் 3 மணி முதல் +1 விடைத்தாள் நகல் வழங்கப்படும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

 இன்று பிற்பகல் 3 மணி முதல் +1 விடைத்தாள் நகல் வழங்கப்படும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

இன்று பிற்பகல் 3 மணி முதல் +1 மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

+1 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பித்த மாணவர்கள் https://dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

 மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்குரிய விண்ணப்பத்தினையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆக.31 முதல் செப்.2ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment